Categories
தேசிய செய்திகள்

கோவாவில் கனமழை… சுரங்கப் பாதையில் திடீர் விபத்து… ரயில்களுக்கு மாற்றுவழி…!!

கனமழை காரணமாக கோவாவில் உள்ள ரயில் சுரங்கப்பதையில் ஏற்பட்ட திடீர் விபத்தால் அந்த வழியாக சென்ற ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

கோவாவில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்து வருகிறது. மேலும் அங்கு பல பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று பெய்த பலத்த மழை காரணமாக வடக்கு கோவா பெர்னெமில் பகுதியில் உள்ள இரயில் சுரங்கப்பாதை சுவரின் ஒரு பகுதி அதிகாலை இடிந்து விழுந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை. தற்போது கொங்கன் ரயில் நிலையத்தின் மூத்த அலுவலர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சுரங்கப் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சுரங்கப் பாதையில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்தால் எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மத்திய லோக்மான்ய திலக் சிறப்பு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மத்திய ராஜதானி சிறப்பு எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதீன் எர்ணாகுளம் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |