விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் கூறி இருக்கின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் 1500 போலீசார் தேவையான உபகாரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றார்கள். மேலும் மாவட்டத்தில் இருக்கும் கடலோர பகுதிகளான பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், மரக்காணம், கோட்டகுப்பம், ஆரோ உள்ளிட்ட பல பகுதிகளில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு முகாமிட்டு தங்கி இருக்கின்றார்கள். மேலும் மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.