தமிழகம் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளைய தினம் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமடுத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.