வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்தில் கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories