Categories
மாநில செய்திகள் வானிலை

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 14மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஏராளமான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image result for கனமழைக்கு வாய்ப்பு

கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளிட்ட இடங்களில் தலா 10 சென்டி மீட்டர் மழையும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மேலும் தென்மேற்கு வங்க கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும்  மீனவர்கள் அடுத்த நான்கு மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |