தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,
ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.