தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை ,ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காவிரி டெல்டா, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.