தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாகா பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.