Categories
மாநில செய்திகள்

நெல்லை, தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி முக்கிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தென்மேற்கு, மத்திய மேற்கு, கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். மணிக்கு 40 -50 கி. மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இன்று முதல் ஜூன் 26 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |