Categories
உலக செய்திகள்

பிரேசிலில் இடைவிடாமல் பெய்யும் கனமழை… 12 பேர் உயிரிழப்பு… 46 பேர் மாயம்!

பிரேசிலில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாயமான 46 பேரை தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சா பாலோ (Sao Paulo) நகரில் இடைவிடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அப்பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.

Image result for The heavy rains have left at least 12 people dead and 46 people missing in the Sao Paulo town of Guajura in Brazil

இந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளை மும்முரமாக மேற்கொண்டனர். மேலும் இடிந்த வீடுகள் மற்றும் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களையெல்லாம் அகற்றி, நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |