Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை… 33 பேர் உயிரிழப்பு… பிரபல நாட்டில் சோகம்..!!

சீனாவில் பெய்த கனமழையால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஐரோப்பியாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பெரும அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

இதற்கிடையே வெள்ளம், கனமழை ஆகியவற்றின் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 8 பேர் மாயமனதாக கூறப்படுகிறது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 3.76 லட்சம் பேர் வெள்ளம் பாதித்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |