தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக அங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
குறிப்பாக தேனி, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 13 சென்டிமீட்டர் மழையும், நீலகிரியில் 12 சென்டிமீட்டர் மழையும், கோவையில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.