Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் கடும் பனிப்பொழிவு – ரயில்கள் தாமதம் ..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகின்றது. வாகனங்கள் செல்லக்கூட முடியாத அளவுக்கு கடும் பனிப்பொலிவால்  வாகன ஓட்டிகள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொலிவு நிலவி வருகிறது.

திருவள்ளூர், ஈக்காடு, புரசைவாக்கம்,  வேப்பம்பட்டு,  திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொலிவானது காணப்பட்டது. மேலும் சென்னை திருப்பதி – தேசிய நெடுஞ்சாலை காலை முதலே பனிப்பொழிவால்  வாகன ஓட்டிகள் கடும்  அவதிக்குள்ளாகி வாகனங்களில் இருக்கும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சொல்லும்  அளவிற்கு கடும் பனிப்பொழிவானது பொலிந்து கொண்டிருக்கிறது.

மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருப்பு பாதையில் கடும் பனிப்பொலிவு காணப்பட்டதால் முகப்பு விளக்குகளால் எரியவிட்டவாறு ரயில்கள் மெதுவாக செல்வதால், திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் அனைத்து புறநகர் ரயில்களை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக செல்கின்றன.

Categories

Tech |