பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் இருக்கும் மின்டனாவ் என்ற மாகாணத்தில் மிகப் பெரிய புயல் உருவானதில் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் மின்டனாவ் மாகாணத்தில் மிகப்பெரிய புயல் உருவானது. அங்கு பலத்த மழை பெய்ததால், பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புயல், பலத்த மழை மற்றும் வெள்ளம் போன்றவற்றில் தற்போது வரை ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூறாவளி காற்று வீசியதால் குடியிருப்புகளின் கூரைகள் விழுந்து, பல குடியிருப்புகள் இடிந்து விழுந்திருக்கிறது. எனவே, சூறாவளி பாதிப்பிலிருந்து, மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பின்றி தப்பித்திருக்கிறார்கள்.
சூறாவளி காற்று வீசியதில், கனமழை பெய்து பலவான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு, தகவல் தொடர்பு தடை ஏற்பட்டதோடு சாலைகளும் பாதிப்படைந்தன. எனவே நாட்டின் கடலோர காவல்படை, மக்களை பத்திரமான இடங்களுக்கு மாற்றி வருகிறது.