நிவர் புயலால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்கு அழைப்பதற்கான எண்களை காவல்துறை அறிவித்துள்ளது.
அதி தீவிரமாக மாறிய நிவர் புயலால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். புயலின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக அரசும், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு புயல் கரையை கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக, சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் ஓடிக் கொண்டிருப்பதால்,
மக்களின் பொருட்களும், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இதில் வாகனங்களும் அடங்கும். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக, அழைக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9498186868, 9444322210, 9962532321 என்ற எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. அதேபோல, மழைநீர் புகுந்து வீட்டிலுள்ள வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டாலும் தகவல் தெரிவித்தால் உதவி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.