2021 ஐபில் போட்டியின் ,நேற்று நடந்த 4 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின .
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.ராஜஸ்தான் அணியின் 19 வயது இளம் வீரரான ரியான் பராக் ,முதல் போட்டியிலேயே பவுலிங் செய்தார் .
அவர் 10 வது ஓவரில் கிறிஸ் கெயிலுக்கு எதிராக ,பவுலிங் செய்யும்போது, அன்டர் ஆர்ம் பந்தை வீசி உள்ளார். சர்வதேச போட்டிகளில் கேதர் ஜாதவ் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் , இந்த அன்டர் ஆர்ம் பந்துகளை வீசுவர். ஆனால் நேற்று 10 வது ஓவரில் பவுலிங் செய்த ரியான், கெயிலை முடக்கும் வகையில் ,பந்தை வீசி உள்ளார் . இதனால் கிறிஸ் கெயில் நார்மல் பந்தில் , ஆட்டமிழந்தார். தற்போது ரியான் பராக் பவுலிங் செய்த வீடியோ , இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்காக ஆம்பயர் ரியான் பரக்காய் , நார்மல் முறையில் பவுலிங் செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
Talk about a low tactic – The almost underarm – I like this from Riyan Parag. #bowlersfightback #IPL2021 pic.twitter.com/cf1vyxyuKi
Riyan Parag
— Omniverse (@omniverse_bot) April 12, 2021