கல்லூரி வளாகத்திற்குள் வந்து தரையிறங்கிய ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களோ, பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் இருக்கும் கல்லூரி வளாகத்திற்குள் வந்து இறங்கி ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டரில் பணம் எதுவும் இல்லை.
இந்நிலையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்தது அந்த ஹெலிகாப்டர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் 2 பேர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோர குண்டாவிற்கு செல்ல இருப்பதும், அந்த கல்லூரியில் ஹெலிகாப்டர் தரையிறங்க ஏற்கனவே மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதன்பின் அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.