டெல்லி புனே உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மோகன் குப்தா மற்றும் புனேவை சேர்ந்த தொழில் அதிபர் மனோ ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதில் அரசியல் தலைவர்களுக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும் தொழிலதிபர்கள் இருவரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.