Categories
சினிமா தமிழ் சினிமா

ஹெலிகாப்டரிலிருந்து தைரியமாக டைவ் அடித்த யாஷிகா… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை யாஷிகா ஹெலிகாப்டரில் இருந்து டைவ் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா கவலை வேண்டாம் ,துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் ‘சல்பர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுதவிர நடிகை யாஷிகா ராஜபீமா, உத்தமன் ,கடமையை செய், பாம்பாட்டம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் .

 

மேலும் நடிகை யாஷிகா அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ஹெலிகாப்டரில் இருந்து டைவ் அடிக்கும் வீடியோவை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எந்தவித பயமுமின்றி துணிச்சலாக ஹெலிகாப்டரிலிருந்து யாஷிகா டைவ் அடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |