Categories
உலக செய்திகள்

வானைத் தொடும் நட்புறவு…. அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி…. இந்திய தூதர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

அமெரிக்க கப்பற்படை அனைத்து விதமான வானிலையிலும் இயங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த 2 ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் என்னும் நிறுவனம் தயாரிக்கும் 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான MH-60 R ரக ஹெலிகாப்டர்கள் மழை, வெயில், புயல் என எந்த மிதமான வான் நிலையிலும் இயங்கக்கூடியது.

இந்நிலையில் அமெரிக்காவின் கடற்படை விமான நிலையத்தில் வைத்து இந்த எம்.ஹெச். 60 ரகத்தின் 2 ஹெலிகாப்டர்களை இந்திய கப்பல் படையிடம் ஒப்படைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதர் கலந்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்புடைய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான நட்புறவு வானை தொடுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |