விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 5 சீசன்கள் நடந்த நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், அசீம், ஷிவின் கணேசன், அசல் கோலார் ஆகியோர் போட்டியாளர் களாக களம் இறங்கியுள்ளனர். அதன்பிறகு வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினியும் நுழைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஜி.பி முத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஜி.பி முத்துவுக்கு அமோகமான ஆதரவு இருக்கிறது. இதனையடுத்து அசல் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளியான நிலையில் அவரை ரசிகர்கள் பலரும் திட்டி தீர்ப்பதுடன் ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பும்படியும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நடந்த ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அசல் அங்கிருந்து எழுந்து செல்கிறார். அவரைப் பார்த்து ஜி.பி முத்து தம்பி உங்களுக்கு ஆம்பளைங்களே பிடிக்காதா என்று கேட்கிறார். இதனால் திகைத்துப் போன அசல் என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்து மழுப்பிக் கொண்டே அங்கிருந்து செல்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் அசலுக்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.