ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காவல்துறையினர் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் போட வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மலைப் பாதைகளில் பயணிக்கும் போது மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.