Categories
மாநில செய்திகள் வேலூர்

நஷ்டத்தை சமாளிக்க…. 75,000 பேர் பணி நீக்கம்….. கதிகலங்கி நிற்கும் தமிழக மாவட்டம்…!!

ஊரடங்கினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வேலூரில் மூடப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 75 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டது.

பலர் வருவாய் இன்றி தவித்து வந்தனர். இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தொழில்நிறுவனங்கள் இயங்க தொடங்கின. ஆனால் ஊரடங்கிற்கு முன் இருந்த லாபம் தற்போது இல்லை. ஏற்கனவே ஊரடங்கு சூழலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தவித்த நிறுவனங்கள் தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் மேற்கொண்டு நஷ்டம் அடைவதாக கூறி,

பல தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு தளர்வுக்கு  பின்பும்  தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூரில்  உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.  வருவாய் இழப்பு காரணமாக மூடப்பட்ட  இந்த தொழில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 1.5 லட்சம் தொழிலாளர்களில்  கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 75 ஆயிரம் நபர்களில்  பெரும்பான்மையானவர்கள் வேலூர் மற்றும் அதனைச் சுற்றி இருக்கக் கூடிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதிலும் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்த  தொழிற்சாலை முடங்கியது இவர்களது அடுத்தகட்ட வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே வேலை இழந்து கதிகலங்கி நிற்கும் அம்மாவட்ட  தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உதவ முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Categories

Tech |