மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு கீழ்க்கண்ட வசதிகளை செய்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வாக இருப்பதால், தொடர்ந்து அடுத்த அடுத்த கட்டமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் தொடர்கிறது.
இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கல்வி வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கால் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதன் காரணமாக, மலை கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதிலும், கல்வி பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மலைக்கிராம மாணவர்களுக்கு சத்தான உணவு, முறையான கல்வி, நோய் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் ஆன்லைன் கல்வியும் , தொலைக்காட்சி மூலம் வகுப்பு எடுப்பதும் மலை கிராமங்களில் சாத்தியமற்ற ஒன்றாக இருப்பதாகவும் அவர்கள் தங்களது கருத்தை முன் வைத்துள்ளனர்.