பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 21.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்திருக்கிறது.
இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட நிதியுதவி குறித்த தெரிவித்திருப்பதாவது இந்த நிதி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
மேலும், இன்னும் சில மாதங்களுக்கு மருந்து, எரிபொருள் மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு உலக வங்கியானது 4,500 கோடி கடனுதவி அளிக்கவிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
தற்போது, இலங்கையின் நிதியமைச்சரான அலி சப்ரி, அமெரிக்க நாட்டிற்குச் சென்று அவசர தேவைக்கு கடன் பெறும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பதற்கு தாமதம் ஏற்படும்.
இந்நிலையில் உலக வங்கியானது 2250 கோடியிலிருந்து 4,500 கோடி ரூபாய் வரை கடனளிக்க முன்வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இந்திய அரசு 3,750 கோடி ரூபாய் வழங்கவிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.