கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுக தொடர்களுக்கு தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தரணியில் மூத்த தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியானம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இந்த ஆண்டு கலைஞருக்கு 97வது பிறந்தநாள், இன்னும் 3 ஆண்டுகளில் நம் முத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என கூறியுள்ளார். சாமானியர்களின் தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டு அப்படியே வாழ்ந்து காட்டியவர் கலைஞர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒரு லட்சியத்திற்காகப் போராடிய அவரே, லட்சியத்தை நிறைவேற்றும் இடத்துக்கு வந்து நிறைவேற்றிக் காட்டியவர் என கூறியுள்ளார். க்லைகரின் பிறந்தநாள் மட்டுமல்ல அவர் பிறந்ததன் நோக்கங்களை, அவரது லட்சியங்களை நாம் நம் இதயங்களில் ஏந்தி நிறைவேற்றிடவும், நிறைவேற்ற உறுதி கொள்ளவுமான நாள் என குறிப்பிட்டுள்ளார். கலைஞரின் பிறந்தநாளை மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று பரவிவரும் நிலையில், தற்போது மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் திமுகவினர் வழங்கினார்கள். கலைகள் இருந்திருந்தால் திமுகவினர் பொதுமக்களுக்கு செய்த உதவிகளை பார்த்து பரவசம் அடைந்திருப்பார் என ஸ்டாலின் கூறினார். கலைஞரே பல இடங்களுக்கு பொருட்களை வழங்க ஓடோடி வந்திருப்பார்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.