பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் சங்கத்தினர் நிதி திரட்டி மருத்துவமனைக்கு உதவும் வண்ணம் சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தினர் கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு உதவ நினைத்துள்ளனர். அதன்படி இந்த சங்கத்தினர் இன்ஷூரன்ஸ் ஓய்வூதியம் பெறுபவர்களிடமிருந்து நன்கொடைகளை வசூலித்து சக்கர நாற்காலிகளை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் நிர்வாகிகள் இணைந்து புதிதாக வாங்கிய 10 சக்கர நாற்காலிகளை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேலிடம் வழங்கியுள்ளனர்.