Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது.

Image

இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் அம்மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.

Image

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அம்மாநில ஆளுநர் திரெளபதி முர்மு ஹேமந்த் சோரனுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Categories

Tech |