Categories
பல்சுவை

இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த செயல்…. ஹென்றியின் கருணையால் உயிர் பிழைத்த ஹிட்லர்…. சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான வீரர்தான் ஹென்றி டேன்டே. அது ஏன் என்றால் இவர் மட்டும்தான் அதிக மெடல் வாங்கின பிரிட்டிஷ் வீரராக இருந்திருக்கிறார். மேலும் இவர் போருக்குப் போய் சண்டை போட்டு திரும்பி வரும்போது அவருடன் சென்று காயமடைந்த சக வீரர்களை தூக்கிக்கொண்டு வந்து அவர்கள் உயிரை காப்பாற்றுவாராம். இதனால் மட்டும் இவர் இவ்வளவு பிரபலமாகவில்லை. 1918 ஆம் ஆண்டு போரில் சண்டை முடிந்தபின் பதுங்கு குழியில் பதுங்கி எதிரிகள் யாரேனும் வருகின்றனரா என்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் ஒரு கருப்பு உருவம் நொண்டி நொண்டி நடந்து வருவதைப் பார்க்கிறார்.

அது யாரென்று தெரியாததினால் தனது துப்பாக்கியை ஏந்தி தயாராக நிற்கிறார். அதன் பின்புதான் தெரிய வருகிறது கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் பயங்கர காயமடைந்த ஜெர்மனியின் நாட்டைச் சேர்ந்த எதிரி வீரர் என்று. என்னதான் எதிரி நாட்டினுடைய வீரராக இருந்தாலும் பயங்கரமாக காயமடைந்து இருந்ததாலும் அவரை சுடாமல் விட்டுவிடுகிறார். ஆனால் அவர் மட்டும் அந்த வீரரை பாவம் பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருந்தால் வரலாற்றில் இரண்டாம் உலகப்போரில் என்ற ஒன்றே நடந்திருக்காது. ஆம்… அந்த காயமடைந்த வீரர் தான் ஹிட்லர். இரண்டாம் உலகப் போர் என்ற ஒன்றை உருவாக்கி உலகம் முழுக்க பல மில்லியன் மக்களை கொன்று குவித்த அதே ஹிட்லர்.

Categories

Tech |