Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் “பசுமை புரட்சி” சொட்டு நீர் பாசனம் மூலம் வளரும் மூலிகை மரங்கள்..!!

திருவண்ணாமலை அரசு பள்ளியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரம் வளர்ப்பதில்   மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணி  குப்பம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து  அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வருகின்றன.

Image result for மரம் நடும் மாணவர்கள்

அப்பள்ளி வளாகத்தை சுற்றி மாணவர்கள் சார்பில் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காட்சியளித்து வருகிறது. ஏராளமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு  சொட்டு நீர் பாசன முறை மூலம் மாணவர்கள் வளர்த்து வருகின்றனர். சிறிய அளவில் துளையிட்ட மண்பானைகள் மூலமும், மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்ற பயன்படும் குப்பிகள் மூலமும் செடிகள் மற்றும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றன.

Image result for சொட்டு நீர் பாசனம்

முன்மாதிரி பள்ளி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள இந்த பள்ளிக்கு அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் வருகை தந்து மாணவர்களின் பணிகளை பார்வையிட்டார். இளம் தலைமுறையினரின் மனதில் மரங்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை பதிய வைப்பதன் மூலம் பசுமையான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை  ராமசாணி குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Categories

Tech |