இனி சமூக இடைவெளியை பின்பற்ற தேவை இருக்காது என இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வரும் ஜூன் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் முக்கிய தளர்வுகளை ஏற்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அதாவது ஜூன் மாதம் முதல் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற தேவையில்லை என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் சூசகமாக தெரிவித்துள்ளார். இவர் இதை அறிவிப்பதற்கு முன்னதாகவே மே 17ஆம் தேதி முதல் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றாக இணையலாம் எனவும் இரு உறவினர் ஒன்றாக இரவில் தங்கி கொள்ளலாம் எனவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற கட்டுப்பாடுகளை சுமார் ஒரு வருடத்திற்கு பின்பு பிரித்தானியா நீக்கியுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு அனுமதிக்கும் திட்டங்களை திட்டமிட்டு வருவதாகவும் திட்டமிட்டபடியே அனைத்தும் முன்நோக்கி செல்வதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆனால் ஜூன் மாதம் 21ஆம் தேதி வரை சமூக இடைவெளியை கண்டிப்பாக மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அதில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். மேலும் மே மாதம் 17ஆம் தேதிக்கு பின்னர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.