பூங்காக்கள் சூட்டிங் போன்றவை நாளை அனுமதிக்கப்படும் நிலையில் அரசு சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி, அதாவது நாளை நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்குகிறது. அதில் அரசு பல தளர்வுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, சினிமா சூட்டிங், பூங்கா, மால்கள், இவற்றிற்கு அனுமதி உண்டு என அரசு கூறியுள்ளது. மேலும் கோவில்களும் திறக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த தளர்வுகளை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் நாளை முதல் வணிக வளாகங்கள், சினிமா படப்பிடிப்புகள், பொது பூங்காக்கள் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தனித்தனியே விவரமாக வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிருமி நாசினி தெளித்தல், ஹேண்ட் சானிட்டைசர் பயன்படுத்துதல், 6 அடி தனிமனித இடைவெளி, உடல்வெப்ப பரிசோதனை, மேலும் அறிகுறி உள்ளவர்களுக்கு அனுமதி மறுப்பு, முகக் கவசம் அணிவது கட்டாயம் இவ்வாறு பல்வேறு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதேபோல சினிமா ஷூட்டிங்கை பொறுத்தவரையில் படப்பிடிப்பு தளங்களில் மொத்தம் 75 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும், படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது, கேமரா முன்னால் நடிப்பவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஷூட்டிங் தளங்களில் ஏசி பயன்படுத்தினால் வெப்பநிலை அளவு 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் இயற்கை காற்றோட்டமும் அவசியம்.