Categories
லைப் ஸ்டைல்

கடனை நாசுக்காக திரும்பி கேட்க மூன்று வழிகள் இதோ …!!

கண்டிப்பான முறையில் கேட்டால், நட்பு முறிந்துவிடும்; எனவே, நாகரிகமான முறையில் பணத்தை திரும்ப கேட்க சில வழிகள் உள்ளன.

பெரும்பாலான சமையங்களில், நண்பர்களும் உறவினர்களும் உதவி கேட்டு வந்து நிற்கும் போது, யோசனை இன்றி பணம் கொடுத்து உதவுவது வழக்கமாக நடைப்பெறுவது உண்டு. ஆனால், கொடுத்த பணத்தை திரும்ப பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
கண்டிப்பான முறையில் கேட்டால், நட்பு முறிந்துவிடும் என்ற பயம். எனவே, நியாயமாக நாகரிகமான முறையில் பணத்தை திரும்ப கேட்க சில வழிகள் உள்ளன.

பேச்சு கொடுக்கவும்:

பணத்தை திரும்பி தரும் நேரம் வந்துவிட்டது என்பதை நினைவு கூற, நீங்கள் பணம் கொடுத்தவரிடம் பேச்சு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த பணத்தை என்ன பயன்பாட்டிற்கு பெற்றார், வேலைகள் எல்லம் முடிந்துவிட்டதா போன்ற கேள்விகளை கேளுங்கள். இதன் மூலம் பணத்தை திரும்பி தர வேண்டும் என்ற நினைவு ஏற்படும்.

மேலும், பணத்தை திரும்பி தர முடியும் என்ற மனநிலையில் அவர் உள்ளாரா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பேச்சு தொடர்ந்தால், எப்போது பணத்தை தர இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

எக்ஸ்சேஞ்:

உங்கள் நண்பருடன் வெளி இடங்களுக்கு செல்லும் போது, உங்களுக்கென்று ஆகும் செலவினை அவரை ஏற்று கொள்ள சொல்லுங்கள். இதன் மூலம், நீங்கள் கொடுத்த பணத்தை இந்த செலவில் கழித்து கொள்வதாக பேச்சு கொடுங்கள். உங்கள் நண்பரின் பதிலில் விவரம் தெரிந்துவிடும்

நினைவூட்டுதல்:

உங்களுக்கென்று முக்கிய செலவு இருப்பதால், பணம் தேவைபடுகிறது என கூறுங்கள். மேலும், பணத்தை திரும்ப தரும் நிலைமையில் இருக்கிறாயா? என்று கேட்பதன் மூலம் உங்கள் நண்பரை புண்படுத்தாது நியாயமான முறையில் கேட்பதாய் அமையும். அப்படி திரும்ப கொடுக்கும் நிலையில் இல்லை என தெரிய வந்தால், சில காலம் அவகாசம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.

Categories

Tech |