Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இங்க இழுத்தடிச்சீங்க…! ”அங்க போய் வாங்கிட்டீங்க” அதிமுகவை வெளுத்த கமல் …!!

மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட் செய்துள்ளார். 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். இன்று நடைபெற்ற விசாரணையில் சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டில், உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |