Categories
அரசியல் மாநில செய்திகள்

“இங்கே திண்ணை நாடகம்” டில்லியில் தெருக்கூத்து?…. மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை சவுந்தரராஜன் சாடல்…!!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மத்தியில் 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வை இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்திக்கிறார்.

Image result for மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். டுவிட்டில் கூறியதாவது, அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி ஸ்டாலின் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்குப் பின் டில்லி குதிரைப் பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு?இங்கே திண்ணை நாடகம்! அடுத்து டில்லியில் கட்சி/அணி மாறிகளின் தெருக்கூத்து?? இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து அவர் விமர்சனம் செய்துள்ளார்.

 

 

Categories

Tech |