ஆண் வாரிசகளைப் போல பெண் வாரிசுகளுக்கும் பெற்றோரின் சொத்துக்களில் சம பங்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் 2005 ஆம் ஆண்டின் இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த போது, ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் பெற்றோரின் சொத்தில் சம பங்கை பெறும் உரிமை இருக்கின்றது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்து வைத்திருப்பவர் இறந்திருந்தாலும் ஆண்களைப் போல பெண்களுக்கும் அந்த சொத்தில் சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.