சமூக வலைத்தளத்தில் வெளியான நடிகர் கவினின் சிறுவயது புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 3 இல் வலம்வந்த கவின் முதன்முதலில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் தற்போது லிப்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அமிர்தா நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கவினின் சிறுவயது புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் கவினின் மிக நெருங்கிய நண்பரும் வால் திரைபடத்தின் ஹீரோவுமான நடிகர் பிரதீப் இருக்கிறார். மேலும் இணையத்தில் வைரலாகி வரும் இந்த படத்தை பார்த்த பலரும் இது கவின்தானா என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.