நடிகை கயல் ஆனந்தியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன
தமிழில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் என்ற படத்தில் நடிகையாக ஆனந்தி என்பவர் அறிமுகமானார். இதனையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதற்குப் பிறகே இவர் கயல் ஆனந்தி என அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு இவர் அலாவுதீனின் அற்புத கேமரா, பிராமண கூட்டம், டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், நடுக்காவேரி, ஜாம்பி ரெட்டி போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும், நடிகை கயல் ஆனந்திக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனைத்தொடர்ந்து ஆனந்தியின் திருமணம் எளிமையாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு சில முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜே.எஸ்.கே சதீஷ், இயக்குனர் நவீன் மற்றும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா போன்றோர் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.