Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் ஒரு காட்டாறு” நிறைய வேலைகளை செய்கிறார்…. இயக்குனரை புகழ்ந்த பிரபுதேவா….!!

பஹிரா பட இயக்குனர் ஆதிக் ஒரு காட்டாறு என பிரபு தேவா பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது ஆதிக் இயக்கி வரும் ”பஹிரா”படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய பிரபுதேவா, இந்த படத்தின் தயாரிப்பாளர் பரதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் , இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு காட்டாறு என கூறினார். ஏனெனில், ஆறு வளைந்து வளைந்து சென்று  ஒரு கடலில் கலப்பது போல ஆதிக் ரவிச்சந்திரன் நிறைய  வேலைகளை செய்து ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறார். கணேஷ் அவர்கள் சிறப்பாக இசை அமைத்துள்ளார் எனவும் கூறினார்.

இதனையடுத்து,  இந்த படத்தின் கதாநாயகிகள் அனைவரும் அழகாக நடித்துள்ளனர் என்றும்,  இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் சக்தி அவர்கள் புது புது டிரஸ் கொடுத்து மிகவும் அசத்தியுள்ளார் என்றும் பாராட்டினார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளனர்.  இந்த படம் அனைவருக்கும் பிடித்ததாக அமையும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |