தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இதன் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ படத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், நாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இயக்கியுள்ளார்.
‘ஆதித்ய வர்மா’ படத்தில் பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘E4 என்டெர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசையமைத்த ராதன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியநிலையில், நவம்பர் எட்டாம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தற்போது படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து, படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.இந்த வாரம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
He's coming on 21st November.#AdithyaVarmaFromNov21
Fall in love yet again in theaters all over the world on Nov 21st.@DhruvVikram8 @Actor_Vikram @PriyaAnand @e4echennai @BanitaSandhu @cvsarathi @dop007 @GIREESAAYA @proyuvraaj @radhanmusic @10gMedia @skycinemas pic.twitter.com/d5azhB56Qf
— E4 Entertainment (@E4Emovies) November 6, 2019