ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு நேரடி நேர்காணல் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் நேர்காணல் நடைமுறைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த முடிவு ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாலும், நேரடி சந்திப்பை அதிகாரிகள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உலகளாவிய பயணம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் விசாக்கள் வழங்கப்படுவதற்கான காலத்தை வெகுவாக குறைப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.