தாய் ஒருவர் தனது 5 மாத குழந்தை அழுததால் எரித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் குட்டி சிங்(27). இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் குட்டி சிங்குக்கு சில மாதங்களாக மனநிலை பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவருடைய 5 மாத குழந்தை சம்பவத்தன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு போய் தீயிட்டுக் கொளுத்தி எரித்துள்ளார். அப்போது அங்கு வந்தஅவருடைய அத்தை இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து குட்டி சிங்கை காவல்துறையினர் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரணையில் அவர், தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை? என்று கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாயே தன் குழந்தையைக் எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.