Categories
சினிமா தமிழ் சினிமா

ஏய்!… மழையில் நனையாதே…. காய்ச்சல் வந்து சளி பிடிக்கும்…. ரச்சிதாவை செல்லமாக கண்டித்த ராபர்ட் மாஸ்டர்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகள், சச்சரவுகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாந்தி, அசல் கோலார் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து  நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரச்சிதா மற்றும் விக்ரமன் தான் புது காதல் ஜோடி என்று இணையதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ரச்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆக விவாகரத்து ஆகியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் இருவரும் நெருங்கிக் பழகுவதும், செல்லமாக சண்டை போடுவதும் என இருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் ரச்சிதா மழையில் நனைந்து ஆட்டம் போடுகிறார். அப்போது ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை பார்த்து மழையில் நனைய வேண்டாம் என்று கூறுகிறார்.

அதோடு மழையில் நனைந்தால் காய்ச்சல் வந்து விடும் சளி பிடித்து விடும் என்றெல்லாம் அக்கறையாக கூறி கண்டிக்கிறார்‌. ரச்சிதா மழையில் நனைவதை பார்த்த அமுதவானன் ஒரு டான்ஸ் ஆடுங்கள் என்று கூறுகிறார். மேலும் இதைக் கேட்ட விக்ரமன் நானே அவளை மழையில் நனைய வேண்டாம் என்று கூறிக்கொண்டிருக்கிறேன் நீங்க வேற என்று அவரிடம் செல்லமாக கோபித்துக் கொள்கிறார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |