இன்ஸ்டா பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பூனையுடன் விளையாடும் கியூட்டான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படத்தில் இணைந்து நடித்து முண்ணனி நாயகியாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் கமர்சியல் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன், நானிக்கு ஜோடியாக தசரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
https://www.instagram.com/reel/Ck8DlGOvf1h/?utm_source=ig_embed&ig_rid=df678dd9-a1eb-45ad-b985-2bdbd879274d
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பூனையுடன் விளையாடும் கியூட்டான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் டேய்.. ப்ளீஸ் டா.. குழந்தைகள் தின விழாவிற்கு ஒரே ஒரு போட்டோ போஸ் குட்ரா என பூனையுடன் கொஞ்சும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வைரலாகி வருகின்றது.