அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, ஜி.ராமநாதன் என்ற இசை அமைப்பாளர் 1,958ம் ஆண்டே அப்படிப்பட்ட வெஸ்டின் மியூசிக்கில் ஒரு பாட்டும், அதை பாடிய டி.எம் சௌந்தராஜனே மேற்கத்திய இசையோடு பாட வைத்து மாபெரும் புரட்சி செய்தார். உத்தம புத்திரன் என்ற படத்தில்…. ஹா…..யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி….
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி ”ஹா” என்கின்ற அந்த சத்தம் இருக்கிறது பாருங்கள்…
அந்த சத்தத்தை டி.எம்.எஸ் கொடுத்தாரா ? இல்ல சிவாஜி கணேசன் கொடுத்தாரா ? என்று சந்தேகமா இருக்கும். இதுல பாஸ்ட் வாக்கிங் சிவாஜி கனெக்ஷன் பண்ணி இருப்பாரு. அந்த பாஸ்ட் வாக்கிங் தான் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கு அடிப்படை. உத்தமபுத்திரன் படத்தில் அவருடைய முமண்ட். இந்த மாதிரி நிறைய விவரங்கள் எல்லாம் அவருடைய பேச்சில் கொடுத்தார்.
கவலை இல்லாத மனிதன் படத்தில் பிறக்கும் போதும் அழுகின்றாய் என்கின்ற பாட்டை எப்படி கொடுத்தார்கள் ? பார்த்த நியாபகம் இல்லையோ என்பதையெல்லாம் ரொம்ப அழகா சொல்லிட்டே இருந்தார். திரும்ப-திரும்ப போட்டு கேட்டுட்டே இருந்தேன். என்னுடைய பட்டிமன்ற கேசட்டில் ஒரு விஷயம் சொல்லி இருப்பேன்.
வாய்ஸ் என்பது எவ்வளவு முக்கியம்… ஒருவருக்கு ஓர் இடத்தில் ஏதாவது செல்வாக்கு இருக்கிறது என்றால் ? அதை நாம் என்ன என்று சொல்வோம்… அவருக்கு அங்கு நிறைய வாய்ஸ் இருக்கின்றது. அப்போ வாய்ஸ்க்கும், செல்வாக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. டேய் இங்க வாடா என்று கூப்பிடுவதை விட…. ஹேய் இங்க வாடா என்று சொன்னால் வருகின்றவர் கொஞ்சம் மெதுவாக வருவார். டேய் இங்க வாடா என்றால் ? வாரேன் சார் என சொல்வான் என பேசினார்.