மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால் மாட்டுவண்டியை போலீசாரே ஒட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ராம தண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மண்ல் திருடுவதாக காவல்துறையினருக்கு பதகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பட்டப்பகலில் மணல் திருட்டு குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர், தலைமைக் காவலர் பாஸ்கரன் தலைமையில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அங்கு கரையோரத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மணல் அள்ளியவர்கள் காவலர்களை கண்டதும் மணலையும், மாட்டு வண்டியையும் அப்படியே விட்டு தப்பித்து ஓடியுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த மாட்டுவண்டிகளை கைப்பற்றிய காவல்துறையினர், மாட்டு வண்டியை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்ல யாரும் இல்லாததால் காவலர் ஒருவரே மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். மாட்டு வண்டியை புல்லரம்பாக்கம் காவலர் கலையரசன் ஓட்ட, இதில் காவலர் பாஸ்கரன் அமர்ந்து ஜாலியாக சென்றுள்ளார். சுமார் 10கிமீட்டர் தூரம் காவலர் சீருடையுடன் மாட்டு வண்டியை ஓட்டி சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர். இதையடுத்து தப்பியோடிய மணல் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை புல்லரம்பாக்கம் கபவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.