ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன் தன்னை முகத்தில் குத்துவேன் என மிரட்டியதாக இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வாயிலாக ரசிகர்களுடன் பேசுவது, நேர்காணல் செய்வது போன்ற பல்வேறு வகைகளில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் நேற்று இந்திய அணியின் வீரர் பார்த்திவ் படேல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், கடந்த 2004ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஹெய்டன் சதம் விளாசினார். அவரின் விக்கெட்டை இர்பான் பதான் வீழ்த்த, நான் அவரிடம் அவர் அருகே சென்று ஸ்லெட்ஜிங் செய்தேன். அது அவருக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் நான் எனது டிரஸ்ஸிங் ரூமை நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர் என் அருகே வந்து மீண்டும் இதுபோல சீண்டினால் உன் முகத்தில் குத்து விழும் என்று எச்சரித்தார் இதற்கு நான் மன்னிப்பு கேட்டேன்.
அதற்குப் பிறகு நடந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் இருவரும் சென்னை அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்குவோம். இது எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. தற்போது இருவரும் மிகுந்த நண்பர்களாக மாறி விட்டோம் நான் ஆஸ்திரேலியா சென்ற போது அவர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்று எனக்காக பிரியாணி செய்து கொடுத்தார் என்று தனது சுவாரஸ்யத்தை பகிர்ந்துள்ளார்.