செம்பருத்தி பூ, இது வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. தசை வலியை போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டது.
இலையின் சாறு வழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.
செம்பருத்தி பூ மாதவிடாயை தூண்டக்கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும்போது ஷாம்பு மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி முடிக்கும் நல்லது.
வடிசாறு சிறுநீரகப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகிறது.
கூந்தல் வளர்ச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும் பூக்களும் பெரும் பங்கு வகிக்கும்.
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும்.
வெள்ளைப்படுதல் நிற்பதற்கு, ரத்தத்தை சுத்தம் செய்வதற்கு இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப்பூ மிகவும் பயனளிக்கும்