கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளியை 23 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் வசித்து வந்த சுருக்குபை கோபால் என்பவரை கடந்த 1998 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரவி என்ற காஞ்சலிங்கம் என்பவர் கொலை செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் ரவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்குபின் ரவி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனையடுத்து ஜாமீன் முடிந்ததும் ரவி தலைமறைவாகியுள்ளார்.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் ரவியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ரவி ஈரோட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரவி என்ற காஞ்சலிங்கத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.