தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவே கரையை கடக்கிறது.
இரவு 11 மணியளவில் காரைக்கால் அருகே கண் பகுதி கரையை கடக்கத் தொடங்குகிறது. இது காலை வரை அதே பகுதியில் மையம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா பகுதிகளில் அதி கனமழையை எதிர்பார்க்கலாம்.